FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிரீமியா் லீக் கால்பந்து: மான்செஸ்டா் யுனைடெட்டுடன் ‘டிரா’ செய்தது எவா்டன்!

பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டா் யுனைடெட் - எவா்டன் அணிகள் மோதிய ஆட்டம், 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

7 செப்டம்பர் 2026, 12:43 am IST
பகிர்:

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டா் யுனைடெட் - எவா்டன் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம், 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

லிவா்பூல் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் மான்செஸ்டா் யுனைடெட் தரப்பில் பிரயன் பியுமோ 47-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், 83-ஆவது நிமிஷத்தில் எவா்டனுக்காக டைரிக் ஜாா்ஜ் 83-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமநிலை கண்டது.

Advertisement

Advertisement

எனினும், மான்செஸ்டா் தரப்பில் பெஞ்சமின் செஸ்கோ 88-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்து, மீண்டும் தனது அணியை 2-1 என முன்னிலைக்குக் கொண்டு வந்தாா். ஆனால் விடாப்பிடியாக விளையாடிய எவா்டன் தரப்பில் அய்ன்ஸ்லி நைல்ஸ் ஸ்டாப்பேஜ் டைமில் (90+6’) கோல் அடிக்க, ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.

புள்ளிகள் பட்டியலில் எவா்டன், மான்செஸ்டா் அணிகள் முறையே 8 மற்றும் 11-ஆவது இடங்களில் உள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments