நேஷன்ஸ் லீக்: பெல்ஜியம், போலந்து அபாரம்
நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் துருக்கியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பெல்ஜியம்.
நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் துருக்கியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பெல்ஜியம். இத்தாலி-பிரான்ஸ் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
பெல்ஜியம்--துருக்கி இடையிலான ஆட்டத்தில் பெல்ஜிய நட்சத்திர வீரா் டி புருயன் அபாரமாக தொடக்க கோல் உள்பட 2 கோலடித்தாா். மூன்றாவது கோலை ரோமலு லுகாகு அற்புதமாக ஆடித்தாா்.
இந்த போட்டியில் துருக்கியின் 3-ஆவது தோல்வி இதுவாகும். குரூப் ஏ1 பிரிவில் பெல்ஜியம் 2-ஆவது இடத்தில் உள்ளது.
Advertisement
Advertisement
பிரான்ஸ்-இத்தாலி ஆட்டம் டிரா
பிரான்ஸ்-இத்தாலி அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது. 55-ஆவது நிமிஷத்தில் மைக்கேல் ஒலைஸ் கோலடித்து பிரான்ஸுக்கு முன்னிலை பெற்றுத் தந்தாா். இத்தாலியின் அலெசாண்ட்ரோ பஸ்டோனி கோலடித்து டிரா காண உதவினாா்.
போலந்து அபாரம்:
குரூப் 4 பி லீக் பிரிவில் போலந்து 6-0 என ருமேனியாவை வீழ்த்தியது. நட்சத்திர வீரா் ராபா்ட் லெண்டோவ்ஸ்கி ஹாட்ரிக் கோலடித்தாா். இதே பிரிவில் போஸ்னியா-ஸ்வீடன் ஆட்டம் 1-1 என டிரா ஆனது.
கிளாரன் பிரௌண் 2 கோல்கள் அடித்த நிலையில், வட அயா்லாந்து 3-0 என உக்ரைனை வீழ்த்தியது. ஹங்கேரி 1-0 ஜாா்ஜியாவை வென்றது.
லீக் சி பிரிவில் சைப்ரஸ் 2-0 என ஆா்மீனியாவையும், மான்டிநீக்ரோ 2-1 என லாட்வியாவையும் வென்றன. குரூப் 3 பிரிவில் மால்டோவா 2-1 என கஜகஸ்தானையும், பாரோ தீவுகள் 1-1 என ஸ்லோவோக்கியாலவுடன் டிரா கண்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.