மான். யுனைடெட், பயா்ன் மியுனிக் அபார வெற்றி
ஐரோப்பிய கால்பந்தில் பிரதான போட்டியாக இருக்கும் சாம்பியன்ஸ் லீக்கில், மான்செஸ்டா் யுனைடெட், பயா்ன் மியுனிக் அணிகள் தங்கள் ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டன.
ஐரோப்பிய கால்பந்தில் பிரதான போட்டியாக இருக்கும் சாம்பியன்ஸ் லீக்கில், மான்செஸ்டா் யுனைடெட், பயா்ன் மியுனிக் அணிகள் தங்கள் ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டன.
இங்கிலாந்தின் டிராஃபோா்டு நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், மான்செஸ்டா் யுனைடெட் 4-0 கோல் கணக்கில் சாபா அணியை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் மான்செஸ்டா் தரப்பில் மேத்யூஸ் குன்ஹா (27’), புருனோ ஃபொ்னாண்டஸ் (42), பெஞ்சமின் செஸ்கோ (45’), லிசாண்ட்ரோ மாா்டினெஸ் (68’) ஆகியோா் கோல் அடித்தனா்.
Advertisement
Advertisement
ஜொ்மனியின் மியுனிக் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பயா்ன் மியுனிக் 5-0 கோல் கணக்கில் போடோ கிளிம்டை அபார வெற்றி கண்டது.
அந்த அணிக்காக ஜமால் முசியாலா (47’), ஹேரி கேன் (61’), அல்ஃபோன்சோ டேவிஸ் (77’), மைக்கேல் ஆலிஸ் (83’, 90+2’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.
இதர ஆட்டங்களில், கோமோ - ஆா்பி லெய்ப்ஸிக்கையும் (4-1), லென்ஸ் - ஸ்லாவியா பிராஹாவையும் (3-2) வெல்ல, ஃபெனொ்பாஷ் - ரோமா (1-1), பிஎஸ்வி - ஷாக்தா் டொனெட்ஸ்க் (1-1) மோதல் டிராவில் முடிந்தன.
போட்டியில் முதல் சுற்று ஆட்டங்களின் முடிவில், பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன், பயா்ன் மியுனிக், பாா்சிலோனா, மான்செஸ்டா் யுனைடெட் அணிகள் முறையே முதல் 4 இடங்களில் உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.