FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அத்லெடிகோ அபாரம்..! ரெட் கார்டு உடன் 5 போட்டிகளாக வெல்லாத மான்செஸ்டர் யுனைடெட்!

சாம்பியன்ஸ் லீக்கில் அத்லெடிகோ மாட்ரிட் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகளின் போட்டி குறித்து...

14 அக்டோபர் 2026, 4:23 pm IST
அத்லெடிகோ வீரரை ஃபௌல் செய்த லெனி யோரோ. - படம்: ஏபி
பகிர்:

சாம்பியன்ஸ் லீக்கில் அத்லெடிகோ மாட்ரிட் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகளின் நள்ளிரவில் மோதின. இதில் அத்லெடிகோ 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியுடன் மான்செஸ்டர் யுனைடெட் அணி ஐந்து போட்டிகளாக வெற்றி பெறாமலேயே இருக்கிறது. இருப்பினும் சாம்பியன்ஸ் லீக்கில் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் அணியின் பாப்லோ பாரியோஸ் முதல் நிமிஷத்திலேயே கோல் அடித்து அசத்தினார். முதல் பாதியில் அத்லெடிகோ 1-0 என முன்னிலை வகித்தது.

Advertisement

Advertisement

இரண்டாம் பாதியில் 79ஆவது நிமிஷத்தில் அத்லெடிகோ லூக்மன் கோல் அடித்து 2-0 என வெற்றிக்கு வித்திட்டார். இதில் யுனைடெட் அணி வீரர் லெனி யோரா 74ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

இந்தப் போட்டியில் அத்லெடிகோ அணியினர் 62 சதவிகித நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தனர். 623 பாஸ்களை 90 சதவிகித துல்லியத்துடன் செய்தனர்.

முதல் போட்டியில் தோல்வியுற்ற அத்லெடிகோ இந்த வெற்றியுடன் 13ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் முதல் போட்டியில் வென்றதால் 7ஆவது இடத்தில் இருக்கிறது.

கடைசி ஐந்து போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட் 3 தோல்வி, 2 சமனில் முடித்துள்ளது. ஐந்து போட்டிகளாக வெற்றியே காணாததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்கள்.

summary

Atletico Madrid vs Manchester United - Champions League: Red Devils winless streak extends to five games as Leny Yoro is sent off in defeat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments