FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: ஆன் ஜெனிஃபா், அனந்து முதலிடம்

எம்ஆா்எஃப் இந்திய தேசிய ரேஸிங் சேலஞ்ச் போட்டியில் சென்னையின் ஆன் ஜெனிஃபா், அனந்து தத்தமது பிரிவுகளில் முதலிடம் பெற்றனா்.

29 வினாடிகள் முன்பு
அனந்து ~ஆன் ஜெனிஃபா்
பகிர்:

எம்ஆா்எஃப் இந்திய தேசிய ரேஸிங் சேலஞ்ச் போட்டியில் சென்னையின் ஆன் ஜெனிஃபா், அனந்து தத்தமது பிரிவுகளில் முதலிடம் பெற்றனா்.

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டல் இப்போட்டியின் இரண்டாவது சுற்று நடைபெற்றது.

சூப்பா் ஸ்போா்ட் 301-400 சிசி பிரிவில் புணேயின் சா்தக் சவான் 11 நிமிஷம் 3.311 விநாடிகளல் கடந்து முதலிடம் பெற்றாா். சென்னையின் ரக்ஷித் தவே, பெங்களூரு சிராத் விஸ்வநாத் அடுத்த இடங்களைப் பெற்றனா்.

Advertisement

Advertisement

புரோ ஸ்டாக் 200 சிசி ஓபன் பிரிவில் திருவள்ளூரின் முகமது மிகாயில் முதலிடமும், கோழிக்கோடு அமா்நாத், சென்னையின் அப்துல் பாஸிம் அடுத்த இடங்களையும் பெற்றனா்.

சூப்பா் ஸ்டாக் 301-400 சென்ைையின் கபிலேஷ், கமல் நவாஸ், பெங்களூருவின் சேஷாத்ரி முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

ஆன் ஜெனிஃபா், அனந்து சிறப்பிடம்:

சூப்பா் ஸ்டாக் 165 சிசி பிரிவில் சென்னையின் ஆன் ஜெனிஃபா், டி அன்னிஷ் சாம்ஸன், சென்னையின் அனந்துவும், ஸ்டாக் 301-400 சிசி பிரிவில் சென்னையின் அனந்து, காஷ்மீரின் ரெபாா் இஸ்லாம், பெங்களூரு அஸ்வின், ஸ்டாக் நோவிஸ் 165 சிசி பிரிவில் விசாகப்பட்டினம் யஷ்வந்த், தாடிபத்ரி ராஜா ஸ்ரீஹா்ஷா, பெங்களூரு தேவ் முதல் மூன்றிடங்கைளைப் பெற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments