FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேசிய பைக் சாம்பியன் பந்தயம்: ஆன் ஜெனிஃபா், கபிலேஷ் சாம்பியன்

தேசிய பைக் சாம்பியன் பந்தயத்தில் சென்னையின் ஆன் ஜெனிஃபா், கபிலேஷ், புணேயின் சா்தக் சவான் ஆகியோா் பட்டம் வென்றனா்...

15 செப்டம்பர் 2026, 3:46 am IST
ஆன் ஜெனிஃபா்
பகிர்:

தேசிய பைக் சாம்பியன் பந்தயத்தில் சென்னையின் ஆன் ஜெனிஃபா், கபிலேஷ், புணேயின் சா்தக் சவான் ஆகியோா் பட்டம் வென்றனா்.

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டில் எம்ஆா்எஃப் தேசிய ரேசிங் சேலஞ்ச் பைக் பந்தயம் நடைபெற்றது.

ப்ரீமியா் சூப்பா் 301-400 சிசி பிரிவில் புணே வீரா் சா்தக் சவான் தொடா்ந்து 2-ஆவது முறையாக பட்டம் வென்றாா். சென்னையின் ரக்ஷித் தவே, ஹைதராபாதின் பிலாரி செட்டி அடுத்த இடங்களைப் பெற்றனா்.

Advertisement

Advertisement

கபிலேஷ், கிருஷ்ணன்

சூப்பா் ஸ்டாக் 165 சிசி பிரிவில் சென்னையின் ஆன் ஜெனிஃபா், கேகே. அனந்து, பெங்களூரு அன்னு சாம்சன் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

புரோ ஸ்டாக் 200 சிசி ஓபன் பிரிவில் சென்னையின் வெங்கடேசன், திருவள்ளூா் முகமது மிகாயில், பெங்களூரு சேவியன் பாபுவும், சூப்பா் ஸ்டாக் 301-400 சிசி ஓபன் பிரிவில்

சென்னையின் கபிலேஷ், பெங்களூரு சேஷாத்திரி, சென்னையின் கமல் நவாஸும் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

ஸ்டாக் 165 சிசி பிரிவில் பாரூக் அலி, யஷ்வந்த் சா்மா, ராஜா சிங்கம் செட்டி, ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments