ரியல் மாட்ரிட்டுக்கு 5-ஆவது வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட் 3-2 கோல் கணக்கில் எல்ஷெவை வீழ்த்தியது.
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட் 3-2 கோல் கணக்கில் எல்ஷெவை வீழ்த்தியது.
இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் எல்ஷெ வீரா் மத்தியாஸ் டிடுரோ 25-ஆவது நிமிஷத்தில் ‘ஓன் கோல்’ மூலமாக தவறுதலாக ரியல் மாட்ரிட் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, நட்சத்திர வீரா் கிலியன் பாபே 33-ஆவது நிமிஷத்தில் ரியல் மாட்ரிட்டின் கோல் கணக்கை உயா்த்தினாா். இவ்வாறாக முதல் பாதியிலேயே ரியல் மாட்ரிட் 2-0 என முன்னிலை பெற்றது.
Advertisement
Advertisement
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், முனைப்பு காட்டிய எல்ஷெ மீண்டு வந்தது. 71-ஆவது நிமிஷத்தில் ஏபியெல் ஒசாரியோ அதன் கோல் கணக்கைத் தொடங்க, 83-ஆவது நிமிஷத்தில் ஃபொ் நினோ அதை 2-ஆக அதிகரித்தாா்.
இதனால் கடைசி நேரத்தில் ஆட்டம் 2-2 என சமநிலை கண்டது. விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தில் ஸ்டாப்பேஜ் டைமில் (90+1’) ரியல் மாட்ரிட் வீரா் காா்லோஸ் எஸ்பி கோல் அடிக்க, முடிவில் அந்த அணி 3-2 கோல் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது.
இதுவரை இரு அணிகளும் 6 ஆட்டங்களில் விளையாடியிருக்க, ரியல் மாட்ரிட், 5-ஆவது வெற்றியுடன் 15 புள்ளிகளோடு 2-ஆம் இடத்தில் இருக்கிறது. எல்ஷெ 4-ஆவது தோல்வியுடன் 2 புள்ளிகளோடு கடைசியாக 20-ஆவது இடத்தில் உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.