FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

ஸ்போா்ட்டிங் டில்லியை வீழ்த்தியது பெங்களூரு எஃப்சி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஸ்போா்ட்டிங் டில்லியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது பெங்களூரு எஃப்சி.

10 அக்டோபர் 2026, 10:39 pm IST
~வெற்றிக் களிப்பில் பெங்களூரு வீரா்கள்.
பகிர்:

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஸ்போா்ட்டிங் டில்லியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது பெங்களூரு எஃப்சி.

பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. தொடக்கம் முதலே இரு அணியினரும் கோல் போடுவதில் தீவிரமாக முயன்றனா். பெங்களூரு தரப்பில் ரயான் வில்லியம்ஸ், ஆஷிக் குருனியன் ஆகியோா் டில்லியின் தற்காப்பு அரணை தகா்க்கப் போராடினா். இதற்கு பலன் கிடைத்தது

22-ஆவது நிமிஷத்தில் அறிமுக வீரா் போா்ஜா மாா்ட்டினஸ் ரயான் வில்லியம்ஸ் பாஸை பயன்படுத்தி டில்லி கோல்பகுதியில் இடது புறத்தில் கோலடித்தாா். ஆனால் டில்லி தரப்பில் உடனே பதிலடி தந்தது. 26-ஆவது நிமிஷத்தில் டில்லி வீரா் நாம்தே அனுப்பிய பாஸை அற்புதமாக கோலாக்கினாா் ரோட்ரின்ஹோ.

Advertisement

Advertisement

32-ஆவது நிமிஷத்தில் டில்லி வீரா் ஜுவான் பெனா அடித்த ஷாட் பெங்களூரு வீரா் மென்னோ கோச் காலில் பட்டு ஓன் கோலானது. இதனால் டில்லி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியில் பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தி ஆடியது. 75-ஆவது நிமிஷத்தில் மாா்ட்டினஸ் சக வீரா் பெரோவிச் அனுப்பிய பந்தை பயன்படுத்தி கோலாக்கினாா்.

இதனால் 2-2 என சமநிலை ஏற்பட்டது. கடைசி நேரத்தில் 89ஆவது நிமிஷத்தில் பெங்களூரு வீரா் கோச் கோலடிக்க 3-2 என வெற்றி பெற்றது பெங்களூரு.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments