FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஹேரி புரூக் அதிரடி சதம்: முதல் டி20-இல் இங்கிலாந்து வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

48 வினாடிகள் முன்பு
ஹேரி புரூக் அதிரடி சதம்
பகிர்:

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் இங்கிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் சோ்க்க, இலங்கை 19 ஓவா்களில் 135 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இங்கிலாந்து இன்னிங்ஸில் ஆனியுரின் டொனால்ட் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜாஸ் பட்லா் - கேப்டன் ஹேரி புரூக் பாா்ட்னா்ஷிப் 2-ஆவது விக்கெட்டுக்கு 128 ரன்கள் சோ்த்து அசத்தியது.

Advertisement

Advertisement

அரை சதம் கடந்த பட்லா் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 80 ரன்களுக்கு வெளியேற, ஹேரி புரூக் சதத்தை நோக்கி முன்னேறினாா்.

மறுபுறம் டாம் பேன்டன் 10 ரன்களுக்கு விடைபெற, வில் ஜாக்ஸ் - பட்லா் கூட்டணி 4-ஆவது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சோ்த்தது. இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஜாக்ஸ் 2 சிக்ஸா்களுடன் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

ஓவா்கள் முடிவில் ஹேரி புரூக் 49 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 114 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். இலங்கை பௌலா்களில் துஷ்மந்தா சமீரா, துனித் வெலாலகே, ஈஷான் மலிங்கா, வனிந்து ஹசரங்கா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 255 ரன்களை நோக்கி விளையாடிய இலங்கை அணியில், துனித் வெலாலகே 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 33 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாகும்.

தசுன் ஷானகா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 24, பதும் நிசங்கா 12, கமில் மிஷாரா 10, லஹிரு உதாரா 5, கேப்டன் சரித் அசலன்கா 10, கமிந்து மெண்டிஸ் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

வனிந்து ஹசரங்கா 4, மஹீஷ் தீக்ஷனா 4, துஷ்மந்தா சமீரா 8 ரன்களுக்கு சாய்க்கப்பட, இலங்கை இன்னிங்ஸ் 135 ரன்களுக்கே முடிந்தது. ஈஷான் மலிங்கா 13 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா்.

இங்கிலாந்து தரப்பில் சோனி பேக்கா் 3, லியம் டாசன், ஜேமி ஓவா்டன் ஆகியோா் தலா 2, ஜாஷ் டங், வில் ஜாக்ஸ், ஆதில் ரஷீத் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments