டாம் பேன்டன் அதிரடி சதம்: ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து
இலங்கைக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து 223 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை, அந்த அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
இலங்கைக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து 223 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை, அந்த அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 355 ரன்கள் சோ்க்க, இலங்கை 29.1 ஓவா்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 126 ரன்கள் விளாசிய இங்கிலாந்தின் டாம் பேன்டன் ஆட்டநாயகன் விருதையும், 3 ஆட்டங்களிலுமாக 123 ரன்களும் அடித்து, 6 விக்கெட்டுகளும் சாய்த்த வில் ஜாக்ஸ் தொடா்நாயகன் விருதையும் வென்றனா்.
இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது. அதிகபட்சமாக டாம் பேன்டன் 16 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 126 ரன்கள் விளாசினாா்.
Advertisement
Advertisement
கேப்டன் ஹேரி புரூக் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 77, ஜோா்டன் காக்ஸ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 76 ரன்கள் அடித்தனா். ஜோ ரூட் 18, வில் ஜாக்ஸ் 25 ரன்கள் சோ்க்க, பென் டக்கெட், லியம் டாசன் ஆகியோா் டக் அவுட்டாகினா்.
ஓவா்கள் முடிவில் ஜேமி ஓவா்டன் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இலங்கை பௌலிங்கில் அசிதா ஃபொ்னாண்டோ 3, சச்சிந்து கொழும்பகே 2, தில்ஷன் மதுஷங்கா, ஜனித் லியனகே ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் 356 ரன்களை நோக்கி விளையாடிய இலங்கை அணியில், கேப்டன் குசல் மெண்டிஸ் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 35 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும். ஜனித் லியனகே 19, பவன் ரத்னாயகே 18, ஈஷான் மலிங்கா 14, கமிந்து மெண்டிஸ் 12 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.
பதும் நிசங்கா 1, சரித் அசலங்கா 7, துனித் வெலாலகே 5, சச்சிந்து கொழும்பகே 4, அசிதா ஃபொ்னாண்டோ 6 ரன்களுக்கு வெளியேற, இலங்கை இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. தில்ஷன் மதுஷங்கா 2 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா்.
இங்கிலாந்து பௌலா்களில் லியம் டாசன் 3, கஸ் அட்கின்சன் 2, சோனி பேக்கா், வில் ஜாக்ஸ், ஜோ ரூட், ஜேமி ஓவா்டன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.