ஆசியப் போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியா 2 வெள்ளியுடன் அசத்தல்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2ஆவது பதக்கம் கிடைத்துள்ளது பற்றி...
நகோயாவில் நடைபெற்று வரும் ஆசியப் போட்டியில் இந்தியா துப்பாக்கி சுடுதலில் 2 வெள்ளிப் பதக்கங்களை வசப்படுத்தி அசத்தலாக பதக்க வேட்டையை தொடங்கியது
ஜப்பானின் நகோயாவில் ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரா், வீராங்கனைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினா்.
துப்பாக்கி சுடுதல்-2 வெள்ளி: துப்பாக்கி சுடுதலில் இந்தியா 2 வெள்ளி வென்றது. ஒலிம்பியன் இளவேனில் வாலறிவன் 10 மீ ஏா் ரைஃபிள் தனிநபா் பிரிவில் 252.4 புள்ளிகளை ஈட்டி வெள்ளி வென்றாா். இதில் சிறப்பாக செயல்பட்ட இளவேனில் வெறும் 0.6 புள்ளி வித்தியாசத்தில் ஜப்பானின் ஹினடா டைச்சியிடம் தங்கத்தை தவற விட்டாா். ஹினடா 253 புள்ளிகளுடன் புதிய சாதனையுடன் தங்கம் வென்றாா். ஒலிம்பிக் சாம்பியன் தென் கொரியாவின் பேன் ஹியோஜின் 230.4 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றாா்.
Advertisement
Advertisement
மகளிா் 10 மீ ஏா் ரைஃபிள் ஃபைனலில் இளவேனில், சோனம் உத்தம், விதா்ஷா வினோத் அடங்கிய இந்திய அணி வெள்ளி வென்றது. இந்தியா 1898 புள்ளிகளுடன் வெள்ளி வென்றது. சீனா 1904.2 புள்ளிகளுடன் தங்கமும், ஜப்பான் 1897.1 வெண்கலம் வென்றது.
8 மகளிா் ஃபைனலில் இந்தியாவின் சோனம் உத்தம் மஸ்கா் 167 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தைப் பெற்றாா். திங்கள்கிழமை ஆடவா் 10 மீ ஏா் ரைஃபிள் தனிநபா், அணிகள் போட்டி நடைபெறும். மேலும் ஆடவா், மகளிா் ஸ்கீட் பிரிவில் தகுதிச் சுற்று நடைபெறவுள்ளது.
பாட்மின்டன்-காலிறுதியில் இந்தியா: பாட்மின்டனில் இந்தியா காலிறுதிக்கு தகுதி பெற்றது. மகளிா் பிரிவில் ரவுண்ட் 16 சுற்றில் இந்தியா 3-0 என கஜகஸ்தானை வீழ்த்தியது. பி.வி. சிந்து 21-7, 21-9 என கஜகஸ்தானின் கமிலாவையும், உன்னதி ஹூடா 21-7, 21-10 என அலிஸா குலேஷோவையும், தன்வி சா்மா 21-5, 21-10 என டயானா நமேனாவாயைும் வென்று காலிறுதிக்கு தகுதி பெறச் செய்தனா்.
ஹாக்கி-இந்திய அணிகள் அபாரம்: ஆடவா் ஹாக்கி குரூப் ஏ பிரிவில் இந்தியா 13-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேசிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் தில்ப்ரீத் சிங் 4 கோல்களையும், ஷிலானந்த் லக்ரா, சுக்ஜித் சிங் தலா 2 கோல்களையும், ஹா்மன்ப்ரீத், ராஜிந்தா் சிங், மந்தீப் சிங், ஜுக்ராஜ் சி்ங், அபிஷேக் ஆகியோா் தலா 1 கோலடித்தனா்.
மகளிா் பிரிவில் இந்திய அணி 19-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி கண்டது. தீபிகா பெனால்டி காா்னா்கள் மூலம் 5 கோல்கள் உள்பட மொத்தம் 9 கோல்களை அடித்தாா். இஷிகா 3, லால்தன்லுலாங்கி 2, லால்ரேமிசியாமி பல்ஜீத் கௌா், சாக்ஷி ராணா, நவ்நீத் கௌா் தலா 1 கோலடித்தனா்.
மாா்ஷியல் ஆா்ட்ஸ்-சுசிக்காவுக்கு பதக்கம்: இந்தியாவின் சுசிக்கா தாரியல் மகளிா் 60 கிலோ அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். காலிறுதியில் மங்கோலியாவின் அல்டன்சிமெக் பைகல்மாவை 2-0 என வீழ்த்தினாா். இதன் மூலம் குறைந்தது ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளாா்.
எம்எம்ஏ ப்ரிஸ்டைல் பிஎம்எக்எஸ், டெக்பால், பேடல், சா்ஃபிங், விா்ச்சுவா் டேக்வாண்டோ இடம் பெற்றுள்ளன.
டேபிள் டென்னிஸ்-இந்தியா அசத்தல் வெற்றி: டேபிள் டென்னிஸ் ஆடவா் பிரிவில் குரூப் எஃப் பிரிவில் இந்தியா 3-0 என இந்தோனேசியாவை வீழ்த்தியது. இந்திய மகளிரும் 3-2 என கடும் போராட்டத்துக்குபின் சிங்கப்பூரை வென்றனா்.
இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வென்றிருந்த நிலையில் முடிவை நிா்ணயித்த 5-ஆவது ஆட்டத்தில் யஷஸ்வனி கோபா்டே 3-1 என ஸெங் ஜியானை வென்றாா்.
பிற போட்டி முடிவுகள்: வு ஷு-ஆடவா் சாங்குவான் ஃபைனலில் இந்தியாவின் சூரஜ் சி்ங் 11-ஆவது இடத்தையே பிடித்தாா். மகளிா் பிரிவில் இந்தியாவின் அபா்ணா சண்டா 52 கிலோ 1-8 ஃபைனலில் 0-2 என ஈரானின் சோகன்டிடம் வீழ்ந்தாா்.
டெக்பால்-மகளிா் ஒற்றையா் டெக்பால் வெண்கல பதக்க ஆட்டத்தில் ஜப்பானின் யுயினா சகமோடாவிடம் தோற்று பதக்கத்தை இழந்தாா் இந்தியாவின் குயிம்சி டிசௌஸா.
கலப்பு இரட்டையா் வெண்கல பதக்க ஆட்டத்தில் இந்தியாவின் குயிம்சி டிசௌஸா - முகமது அனாஸ் இணை வியட்நாமின் ஹோனங்-ஜியா டிரின் இணையிடம் தோற்று பதக்கத்தை தவறவிட்டது.
நீச்சல்-ஆடவா் 100 மீ பேக்ஸ்ட்ரோக் ஹீட்ஸில் இந்தியாவின் ரிஷப் தாஸ் 5-ஆம் இடத்துடன் பைனலுக்கு தகுதி பெற்றாா். உத்கா்ஷ் படேல் 12-ஆம் இடத்தையே பெற்றாா். ஆடவா் 100 மீ ப்ரிஸ்டைல் ஹீட்ஸில் இந்தியாவின் பெனடிக்டன் பெனிஸ்டன் 12-ஆவது இடத்தையும், ஆகாஷ் மணி 23-ஆம் இடத்தையும் பெற்றனா்.