2032 உலக சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி: புணேயில் நடத்த அனுமதி
வரும் 2032-ஆம் ஆண்டுக்கான யுசிஐ சாலை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை புனே பெற்றுள்ளது. இதன் மூலம், மிதிவண்டிப் பந்தயத்தின் உலகளாவிய போட்டி முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளது.
வரும் 2032-ஆம் ஆண்டுக்கான யுசிஐ சாலை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை புனே பெற்றுள்ளது. இதன் மூலம், மிதிவண்டிப் பந்தயத்தின் உலகளாவிய போட்டி முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளது.
மத்திய அரசின் ஆதரவுடன், மகாராஷ்டிர அரசு மற்றும் இந்திய மிதிவண்டிப் பந்தயக் கூட்டமைப்பு (இஊஐ) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இது அமைந்துள்ளது.
விளையாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், திறமைகளை வளா்த்தல் மற்றும் இந்தியாவை ஒரு உலகளாவிய விளையாட்டு நாடாக உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக பிரதமா் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் சைக்ளிஸ்ட் இன்டா்நேஷனலின் தலைவா் டேவிட் லாபாா்ட்டியன்ட் , புணே மாவட்ட ஆட்சியா் ஜிதேந்திர துடி, இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு பொதுச் செயலாளா் மனிந்தா் பால் சிங் பங்கேற்றனா்.
2032 யுசிஐ சாலை உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்திய வீரா், வீராங்கனைகளுக்கு புதிய அனுபவத்தை தரும். சாலை உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், இந்தியாவின் விளையாட்டு லட்சியம், மிதிவண்டித் திறமை மற்றும் வளா்ந்து வரும் ஆற்றல்களை வெளிப்படுத்த வாய்ப்பாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.