தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதைப் பற்றி...
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) மாநிலச் செயலர் ஜெகதீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன நாளை முன்னிட்டு, அக். 18 அல்லது 25 ஆம் தேதி அல்லது நவ. 1 ஆம் தேதியில் தமிழ்நாடு முழுவதும் ஊர்வலம் நடத்த அனுமதிக்கோரி டிஜிபியிடம் விண்ணப்பித்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பம் தொடர்பாக எந்தப் பதிலும் கிடைக்காததால் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் என்.எல். ராஜா, ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
Advertisement
Advertisement
“ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தப்படுவது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், விஜயதசமிக்கு முந்தைய நாளான அக். 25, நவ. 1 ஆகிய தேதிகளில், பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி வழங்குமாறு வெள்ளிக்கிழமை காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
பேரணிக்கு அனுமதி மறுக்க காவல்துறை எந்த புதிய காரணங்களையும் கூறவில்லை. ஏற்கனவே இந்த நீதிமன்றம் நிராகரித்த பழைய காரணங்களையே மீண்டும் மீண்டும் கூறிவருவதாகவும் கடிந்துகொண்ட நீதிபதி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிக்கான நேரம், வழித்தடங்கள், இடங்களை அக். 19-க்குள் இறுதி செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
The Madras High Court on Friday permitted the Rashtriya Swayamsevak Sangh (RSS) to conduct route marches across Tamil Nadu on October 25 and November 1, while criticising the State police for repeatedly denying permission.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.