FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஸ்குவாஷ் பிரிவில் 2 பதக்கங்கள் உறுதி: அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியர்கள்!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டு இந்தியர்கள் குறித்து...

25 செப்டம்பர் 2026, 3:22 pm IST
அபய் சிங், அனாஹத் சிங் - படங்கள்: எக்ஸ் / சாய் மீடியா
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் பிரிவில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் இரண்டு இந்தியர்கள் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்கள்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் இரண்டு இந்திய வீராங்கனைகள் 18 வயதான அனாஹத் சிங், 30 வயதான தன்வி கண்னாவும் மோதினார்கள்.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் அனாஹத் சிங் 3-0 (11-2, 11-5, 11-3) என்ற கேம்களில் ஆதிக்கம் செலுத்தி வென்றார். ஏற்கெனவே, இவர்கள்  கடைசியாக ஜேஎஸ்டபிள்யூ இந்தியன் ஓபனில் மோதிய போது அனாஹத் சிங் 3-1 என தன்வியை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் - ஜப்பானின் ரியூனோசுகே சுகுயே உடன் மோதினார். இந்தப் போட்டியில் அபய் சிங் 3-0 (11-4, 11-3, 11-6) என்ற கேம்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. ஏற்கெனவே, 19 பதக்கங்கள் வென்றுள்ள இந்திய அணிக்கு கபடியிலும் இரண்டு பதக்கங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

summary

Anahat and Abhay Singh reach squash semi-finals at Asian Games 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments