ஸ்குவாஷ் ஆடவர் பிரிவில் இறுதிக்கு முன்னேறிய தமிழக வீரர்..! வரலாற்றுச் சாதனை படைப்பாரா?
தமிழக ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் ஆசிய விளையாட்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறித்து...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய - தமிழக ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் ஆடவர் ஒற்றையர் பிரிவில், அரையிறுதியில் பாகிஸ்தான் வீரரை வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த அபய் சிங் இன்று ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது இர்பானுடன் மோதினார்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் அபய் சிங் 35 நிமிஷங்களில் 3-0 என (11-3, 12-10, 11-6) என நேர் கேம்களில் வென்று அசத்தினார். இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இதுவரை இந்திய ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் யாருமே பதக்கம் வென்றதில்லை என்பது நினைவுகூரத்தக்கது. இந்த நிலையில், ஆடவர் பிரிவில் அபய் சிங் சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மகளிர் பிரிவில் முதல்முறையாக அனாஹத் சிங் இறுதிக்கு முன்னேறியுள்ளார். இதில் தங்கம் வெல்பவர்கள் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Abhay Singh Storms Into Asian Games Squash Final With Victory Over Pakistan’s Muhammad Irfan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.