ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்றார் தமிழக ஸ்குவாஷ் வீரர்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் குறித்து...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்று, வெள்ளி வென்றார். இவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் - மலேசியாவின் ஈன் யோவ் ங் உடன் மோதினார்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் 0-3 (9-11, 5-11, 5-11) என்ற கேம்களில் மலேசிய வீரரிடம் தோல்வியுற்றார். இருப்பினும் அவரது முயற்சிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்தப் பிரிவில் முன்னதாக, சௌரவ் கோஷல் 2014, 2022ல் வெள்ளி வென்றிருந்தார். தற்போது, மூன்றாவது பதக்கத்தை அபய் சிங் வென்றுள்ளார். இருப்பினும் இதுவரை இந்தியர்கள் சார்பில் தங்கம் வெல்லவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இதுவரை இந்தியாவுக்கு 4 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தமாக 31 பதக்கங்கள் கிடைத்துள்ளன. மகளிர் ஸ்குவாஷ் பிரிவிலும் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Tamilnadu squash player Abhay Singh settles for Asian Games silver after losing to Eain Yow Ng in men's singles final
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.