44 ஆண்டுகளில் முதல்முறையாக மாரத்தானில் பதக்கம்..! வெள்ளி வென்றார் இந்திய வீரர்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய தடகள வீரர் சவான் பர்வால் குறித்து...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள வீரர் சவான் பர்வால் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பிரிவில் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள வீரர் சவான் பர்வால் 2 மணி நேரம் 11 நிமிஷங்கள் 37 நொடிகளில் இலக்கை கடந்து அசத்தினார்.
Advertisement
Advertisement
ஜப்பான் வீரர் இச்சிதாகா யமாஷிதா 2 மணி நேரம் 10 நிமிஷங்கள் 49 நொடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்று அசத்தினார். இந்திய வீரரை விட ஒரு நிமிஷம் முன்பாக வந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
சீனாவின் பேய்யூ ஃபெங்க் 2 மணி நேரம் 12 நிமிஷங்கள் 13 நொடிகளில் இலக்கை கடந்து வெண்கலம் வென்றார். மற்றுமொரு இந்திய வீரர் கார்த்திக் கர்கேரா 17ஆவது இடம் பிடித்தார்.
முன்னதாக இந்திய அணி ஹில்லியில் நடைபெற்ற 1982 ஆசிய விளையாட்டில் மாரத்தானில் பதக்கம் வென்றிருந்தது. தற்போது, 44 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பிரிவில் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Asian Games 2026: India's Sawan Barwal wins historic silver in men's marathon
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.