FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வெள்ளி வென்ற இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங்..! ஆசிய விளையாட்டில் ஹாட்ரிக் பதக்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர் குறித்து...

26 செப்டம்பர் 2026, 6:02 pm IST
தஜிந்தர்பால் சிங் - படம்: எக்ஸ் / ஏஎஃப்ஐ இந்தியா
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டி குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் டூர் (31 வயது) வெள்ளி வென்று அசத்தியுள்ளார். மகளிர் பிரிவில் வெண்கலம் வென்றதும் கவனிக்கத்தக்கது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் டூர் இறுதிப் போட்டியில் பங்கேற்றார். மொத்தம் எட்டு பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் வெள்ளி வென்றார்.

Advertisement

Advertisement

தஜிந்தர்பால் சிங் டூர் தனது ஐந்தாவது வாய்ப்பில் 20.64 மீட்டருக்கு குண்டு எறிந்து அசத்தினார். ஈரானின் முகம்மத்ரேசா தயேபிசே 20.81 மீட்டருக்கு எறிந்து தங்கம் வென்றார்.

முதல் நான்கு வாய்ப்பில் 20.26 மீ., 19.77 மீ, 19.71 மீ. மற்றும் 20.64 மீட்டருக்கு எறிந்தார். ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்ச தூரம் எறிந்தார். கடைசி வாய்ப்பில் ஃபௌல் (தவறு) செய்ததால் 20.64 மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பஞ்சாபைச் சேர்ந்த தஜிந்தர்பால் சிங் டூர் முன்னதாக 2018, 2022 ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றிருந்தார். தற்போது, வெள்ளி வென்று ஹாட்ரிக் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதுவரை ஆசிய விளையாட்டில் இந்திய அணி 4 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 29 பதக்கங்களை வென்றுள்ளது. ஸ்குவாஷ் பிரிவில் இரண்டு இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

summary

Tajinderpal Singh Toor Wins 3rd Straight Asian Games Medal, Bags Silver In Shot Put

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments