FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியாவுக்கு 10ஆவது தங்கம்..! நடப்பு எடிஷனில் 2 பதக்கம் வென்ற ஆயுஷ் வெர்மா!

ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய வீரர் ஆயுஷ் வெர்மா குறித்து...

8 வினாடிகள் முன்பு
இந்திய வீரர் ஆயுஷ் வெர்மா - படம்: எக்ஸ் / டிடி ஸ்போர்ட்ஸ்
பகிர்:

ஆசிய பாரா விளையாட்டில் இந்திய வீரர் ஆயுஷ் வெர்மா குண்டெறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இது இந்தியாவுக்கு 10ஆவது தங்கப் பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆடவருக்கான எஃப்53 குண்டெறிதலில் இந்திய வீரர் ஆயுஷ் வெர்மா 8.16 மீட்டருக்கு குண்டெறிந்து தங்கம் வென்றார். தனது ஐந்தாவது முயற்சியில் அதிகபட்ச தூரத்துக்கு குண்டெறிந்து அசத்தினார்.

Advertisement

Advertisement

ஈரானின் அலிரெஜா ஹெமாமி 8.09 மீட்டருக்கு குண்டெறிந்து வெள்ளிப் பதக்கமும் கஜகஸ்தானின் மகாம்பெட் செரிக்காலியேவ் 6.81 மீட்டருக்கு குண்டெறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றார்கள்.

நடப்பு பாரா எடிஷனில் ஆயுஷ் வெர்மாவுக்கு இது இரண்டாவது பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஈட்டி எறிதலில் எஃப்53/ எஃப்54 பிரிவில் வெண்கலம் வென்றிருந்ததும் நினைவுகூரத்தக்கது.

எஃப்53 என்பது உடலில் அதிகப்படியான காயமும், கால்கள் மற்றும் கைப்பிடி ஆகிய பகுதிகளில் குறைவான அளவு காயமும் ஏற்பட்டிருக்கும் விளையாட்டு வீரர்களைக் குறிப்பிடுவதாகும்.

இந்த வீரர்கள் உட்கார்ந்துகொண்டே தங்களது மார்பு, தோள்பட்டை, பின்புற முதுகு பகுதிகளில் இருந்து ஆற்றலை உபயோகப்படுத்துவார்கள்.

summary

Ayush Verma wins gold in men's shot put F53 event

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments