FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியாவுக்கு 19ஆவது பதக்கம்: துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற மூவர் குழு!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய அணி குறித்து...

25 செப்டம்பர் 2026, 12:25 pm IST
துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற மூவர் குழு - படம்: எக்ஸ் / சாய் மீடியா
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 50 மீ ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் மூவர் கொண்ட இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

இந்தப் பதக்கத்துடன் இந்தியாவுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 19 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 2 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

Advertisement

Advertisement

ஆடவருக்கான 50 மீ ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியா சார்பில் ருத்ராங்க்ஷ் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் தோமர் மற்றும் நிரஜ் குமார் மூவர் கூட்டணி வெள்ளி வென்றது.

இறுதிச் சுற்றில் இந்திய அணி 1762 (94x) புள்ளிகளில் நூலிழையில் தங்கத்தை இழந்தார். சீன அணியினர் 1766 (95x) புள்ளிகளில் தங்கம் வென்றார்கள். தென் கொரிய அணியினர் 1751 (87x) புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்கள்.

இதில் நிரஞ்சன் குமார் முதல்முறையாக ஆசிய விளையாட்டில் பங்கேற்று வெள்ளி வென்றுள்ளதும் பாராட்டத்தக்கது. இதே 50 மீட்டர் ரைபிள் 3 தனியாக பங்கேற்ற பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 327.6 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடமும், நிரஜ் குமார் 299 புள்ளிகள் பெற்று கடைசி (8) இடமும் பிடித்தார்கள்.

முன்னதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவிலும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

summary

Asian Games 2026: 19th medal for India: Shooting trio wins silver men's 50m rifle 3 position

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments