FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆசிய விளையாட்டு: பதக்க வாய்ப்பை இழந்த பிவி சிந்து, உன்னாட்டி ஹூடா!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் காலிறுதியில் தோல்வியுற்ற இந்திய பாட்மின்டன் வீராங்கனைகள் குறித்து...

27 செப்டம்பர் 2026, 12:15 pm IST
பிவி சிந்து, உன்னாட்டி ஹூடா - படங்கள்: எக்ஸ் / சாய் மீடியா
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பாட்மின்டன் வீராங்கனைகள் பிவி சிந்து, உன்னாட்டி ஹூடா ஆகியோர் காலிறுதியில் தோல்வியுற்று, பதக்க வாய்ப்பை இழந்தார்கள்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில் மகளிருக்கான ஒற்றையர் பாட்மின்டன் போட்டியில் காலிறுதியில் இரண்டு இந்தியர்கள் வெவ்வெறு வீராங்கனைகளுடன் மோதினார்கள்.

Advertisement

Advertisement

பிவி சிந்து சீன வீராங்கனை சென் யுஃபேயுடன் 1-2 என்ற கேம்களில் (21-11, 18-21, 10-21) என்ற கேம்களில் தோல்வியுற்றார். முதல் கேமில் வென்ற பிவி சிந்து இரண்டாவது கேமில் இறுதியில் பதக்க வாய்ப்பை இழந்தார்.

மற்றுமொரு வீராங்கனை உன்னாட்டி ஹூடா ஜப்பான் வீராங்கனை உடன் 1-2 என்ற கேம்களில் (16-21, 21-14, 17-21) தோல்வியுற்றார்.

இத்துடன் இந்தியாவின் பாட்மின்டன் பயணம் ஆசிய விளையாட்டில் முடிவுக்கு வருகிறது. இதுவரை இந்திய அணி 30 பதக்கங்களை வென்றுள்ளன.

summary

Badminton: PV Sindhu and Unnati Hooda miss out on medal chances at Asian Games 2026!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments