இந்தியாவுக்கு 32ஆவது பதக்கம்: 18 வயதில் வரலாற்றுச் சாதனை படைத்த அனாஹத் சிங்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் குறித்து...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் இறுதிப் போட்டியில் தோல்வியுற்று, வெள்ளி வென்றார்.
மகளிர் பிரிவில் முதல்முறையாக பதக்கம் வென்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் அபய் சிங் வெள்ளி வென்றதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங் - மலேசியாவின் சிவசங்கரி சுப்ரமணியம் மோதினார்கள்.
இந்தப் போட்டியில் அனாஹத் சிங் 0-3 (4-11, 4-11, 7-11) என்ற கேம்களில் தோல்வியுற்றார். இருப்பினும் இந்திய மகளிர் வரலாற்றில் முதல்முறையாக பதக்கம் வெல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்தியாவுக்கு 32 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் 4 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
India's 32nd medal: Anahat Singh achieves a historic feat at the age of 18!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.