FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியாவுக்கு 58ஆவது பதக்கம்: குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற வீராங்கனை!

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை குறித்து...

குத்துச்சண்டை வீராங்கனை பிரியா - படம்: எக்ஸ் / ஒலிம்பிக் கேல்
பகிர்:

ஆசிய விளையாட்டில் குத்துச்சண்டை வீராங்கனை பிரியா கங்காஸ் அரையிறுதியில் தோல்வியுற்றதன் மூலம் வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இன்று இந்திய அணி ஒரே நாளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. குத்துச் சண்டையிலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement

மகளிருக்கான 60 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பிரியா கங்காஸ் சீனாவின் யங் சென்ங்யூ உடன் மோதினார். இந்தப் போட்டியில் சீன வீராங்கனை 4-1 என வென்றார்.

20 வயதான இந்திய வீராங்கனை பிரியாவுக்கு இது முதல் ஆசிய விளையாட்டு அனுபவமாகும். இருப்பினும் முதல் முறையே பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு குத்துச் சண்டையில் வெள்ளி, 3 வெண்கலம் வென்றுள்ளார்கள். மூவர் இறுதிச் சுற்றிலும் இருக்கிறார்கள். இதனால் 6 பதக்கங்கள் இப்போதைக்கு உறுதியாகியுள்ளன.

இதுவரை இந்திய அணி 10 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலத்துடன் 58 பதக்கங்கள் பெற்றுள்ளன.

summary

Boxer Priya Ghanghas signs off with bronze medal at asian games 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments