"திமுகவினருக்கு தோல்வி பயம்': சைதை துரைசாமி
சென்னை, அக். 8: தோல்வி பயத்தில் திமுகவினர் துவண்டுபோய் இருப்பதாக சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தெரிவித்தார். புரசைவாக்கம் பாதாள அம்மன் கோயிலிலிருந்து ச
சென்னை, அக். 8: தோல்வி பயத்தில் திமுகவினர் துவண்டுபோய் இருப்பதாக சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
புரசைவாக்கம் பாதாள அம்மன் கோயிலிலிருந்து சனிக்கிழமை தனது பிரசாரத்தைத் தொடங்கிய சைதை துரைசாமி, மில்லர்ஸ் சாலை, பால்பர் சாலை, ராமநாதன் சாலை, புதிய ஆவடி சாலை, ஹால்ஸ் சாலை, டி.பி. சத்திரம், பெரியார் நெடுஞ்சாலை, ரயில்வே காலனி, இந்திரா காந்தி நகர், ஆசாத் நகர், எம்.எம்.டி.ஏ. காலனி, சூளைமேடு பெரியார் பாதை, அரும்பாக்கம், நடுவக்கரை, அண்ணா நகர், அன்னை சத்யா நகர், என்.எஸ்.கே. நகர், பி.பி.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா, தியாகராய நகர் தொகுதி எம்.எல்.ஏ.வான வி.பி. கலைராஜன் ஆகியோர் சைதை துரைசாமிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தனர்.
Advertisement
Advertisement
டி.பி. சத்திரம் பகுதியில் சைதை துரைசாமி பேசியது:
தேர்தல் பிரசாரத்துக்காக நான் செல்லும் இடங்களில் எல்லாம் முந்தைய திமுக அரசு பற்றியும், சென்னை மாநகராட்சி நிர்வாகம் குறித்தும் மக்கள் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் மக்கள் நலப்பணிகளில் அக்கறை செலுத்தாத திமுகவுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் கற்பிக்கத் தயாராக உள்ளனர். பல இடங்களில் அடிப்படை வசதிகள் செய்யாததால் திமுக கவுன்சிலர்கள் பிரசாரத்துக்கு செல்லவே தயக்கம் காட்டி வருகின்றனர்.
திமுக மேயர் வேட்பாளர்களும், கவுன்சிலர் வேட்பாளர்களும் தோல்வி பயத்தில் துவண்டு போய் இருக்கிறார்கள். புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னையின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கண்டவர் முதல்வர் ஜெயலலிதா.சென்னையை உலகத் தரம் வாய்ந்த நகரமாக உருவாக்க அவர் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளார் என்றார் சைதை துரைசாமி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.