FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சீர்காழி அருகே பூட்டியிருந்த வீட்டில் மர்ம ஆசாமிகள் கைவரிசை: 40 பவுன் கொள்ளை

சீர்காழி அருகே பூட்டியிருந்த வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 40பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.1லட்சம் ரொக்கத்தை கொள்ளை....

9 ஜனவரி 2024, 11:52 am IST
பகிர்:

சீர்காழி அருகே பூட்டியிருந்த வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 40பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.1லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றது புதன்கிழமை இரவு தெரியவந்தது.

சீர்காழி அடுத்த புத்தூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஜ.ரசூல்பீவி(68).இவரது மகன் கமர்தீன்,மகள்கள் சையதுநிஷா(41),வகீதுநிஷா.வகீதுநிஷா இறந்துவிட்டதால் தற்போது ரசூல்பீவி மருமகன் சேக்அலாவூதீன்(சவுதியில் பணியாற்றுகிறார்) சொந்தமான புத்தூர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சையதுநிஷா கடந்த 1-ம் தேதி மலேசியாவிலிருந்து,புத்தூர் வந்திருந்தார். ரசூல்பீவி மற்றும் சையதுநிஷா ஆகிய இருவரும் புதன்கிழமை காலை வீட்டினை பூட்டிக்கொண்டு,கமர்தீன் மகன் ரியாஷ்க்கு கும்பக்கோணம் அடுத்த கருப்பூர் கிராமத்தில் நடைபெறும் ஜீனிபோடும் விழாவிற்கு சென்றிருந்தனர். அன்றைய தினம் இரவு 11.30மணிக்கு வீடு திரும்பிய ரசூல்பீவி மற்றும் சையதுநிஷா வீட்டில் லைட் எரிவதை கண்டு திடுக்கிட்டனர்.

வீட்டின் முன்பக்க கதவினை திறக்க முயன்றபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் முன்பக்க கதவினை நெம்பி திறந்து உள்ளே சென்றனர்.அப்போது வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கபட்டிருந்தது.பீரோவை சோதனையிட்டபோது அதிலிருந்த 40பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.1லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. கொள்ளையர்கள் வீட்டின் சமையல் அறையின் மேல் பகுதியில் புகை வெளியேற அமைக்கபட்டிருந்த கம்பிகளை பாறையை கொண்டு வளைத்து உள்ளே நுழைந்து,இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்கபூர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை நடத்தினர்.நாகையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்டடு,கைரேகைகள் பதிவு செய்யபட்டது.இந்த துணிகர கொள்ளையால் சீர்காழி பகுதியில் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments