FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரூரில் லாரி தீப்பற்றி எரிந்தது: ரூ.10 லட்சம் மஞ்சள் மூட்டைகள் சேதம்

அரூரில் லாரி தீப்பற்றி எரிந்ததில், ரூ.10 லட்சம் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

அரூரில் லாரி தீப்பற்றி எரிந்ததில், ரூ.10 லட்சம் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன.
 அரூர் வட்டம், கருத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தீர்த்தகிரி மகன் தமிழரசன். இவருக்குச் சொந்தமான லாரி ஈரோட்டில் இருந்து மஞ்சள் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தில்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
 அப்போது, லாரியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக அரூரை அடுத்த மோப்பிரிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பட்டறையில் லாரியை அதன் ஓட்டுநர் சையத் பாஷா நிறுத்திவிட்டுச் சென்றார். இதையடுத்து, டீசல் டேங்க் பகுதியில் வெல்டிங் செய்தபோது லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது.
 இதில் லாரியும், அதில் இருந்த 20 டன் மஞ்சள் மூட்டைகளும் எரிந்து நாசமாயின.
 இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லாரியில் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜா (50), ஜெயசீலன் (35) ஆகியோர் காயமடைந்தனர்.
 இந்தச் சம்பவம் குறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments