FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இலங்கையின் போர் குற்றத்தில் உள்நாட்டு விசாரணையை ஏற்றுக் கொள்ள முடியாது: பினாங் துணை முதல்வர் ராமசாமி

இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணையை ஏற்றுக் கொள்ள முடியாது. சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால்தான் நியாயம் கிடைக்கும் என பினாங் துணை முதல்வர் ராமசாமி கூறியுள்ளார்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணையை ஏற்றுக் கொள்ள முடியாது. சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால்தான் நியாயம் கிடைக்கும் என பினாங் துணை முதல்வர் ராமசாமி கூறியுள்ளார்.

திருப்பூர், பல்லடம் அருகே மதிமுக சார்பில் நடைபெற உள்ள அண்ணாவின் 107-வது பிறந்த நாள் விழா மற்றும் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் பினாங் துணை முதல்வர் ராமசாமி கோவைக்கு விமானம் மூலம் வந்தார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் பிறந்தது வளர்ந்ததெல்லாம் பினாங். ஆனால் எனது பூர்வீகம் வெள்ளக்கோயில்தான். கடந்த 1920 ஆம் ஆண்டு எனது தாத்தா, அப்பா உள்ளிட்டோர் பினாங்குக்கு குடிபெயர்ந்தனர். வெள்ளக்கோயிலுக்கு 5 முறை வந்து சென்றுள்ளேன். ஆனால் எனக்கு கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் மண்ணில் காலடி எடுத்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisement

Advertisement

தற்போது, பிரதமர் மோடி, வைகோவின் முயற்சியால் மீண்டும் தமிழ் மண்ணில் கால் வைத்துள்ளேன்.

எங்களைப் பொறுத்தவரை தமிழீழம் உருவாக வேண்டும் என்பதே விருப்பம். இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணையை ஏற்றுக் கொள்ள முடியாது. சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால்தான் நியாயம் கிடைக்கும்.

சர்வதேச விசாரணைக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் வலியுறுத்த வேண்டும் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments