FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குவைத் நாட்டு வேலைவாய்ப்பு: செப்.19-இல் நேர்காணல்

குவைத் நாட்டில், கனரக வாகன ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளுக்கு வருகிற சனிக்கிழமை (செப்.19) நடைபெறும் நேர்காணலில் விருப்பமுள்ளவர்கள்

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

குவைத் நாட்டில், கனரக வாகன ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளுக்கு வருகிற சனிக்கிழமை (செப்.19) நடைபெறும் நேர்காணலில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
 இது குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.சமயமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 குவைத் நாட்டில், இந்தியத் தொலைத்தொடர்புத் திட்டப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதாவது கேபிள் பொருத்துவதற்கான பள்ளம் தோண்டுதல் தொடர்பில் அனுபவம் பெற்றவர்கள் தேவைப்படுகிறார்கள். எட்டாம் வகுப்புத் தேர்ச்சியுடன் 22 முதல் 35 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
 அதேபோல், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் குவைத் ஓட்டுநர் உரிமம் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்களும் தேவைப்படுகிறார்கள்.
 இந்திய கனரக ஓட்டுநர் உரிமம், ஜிசிசி கனரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட பணிக்குத் தகுதியானவர்களாவர். இருப்பினும், குவைத் நாட்டில் கனரக ஓட்டுநர் உரிமம் பெறும் வரை லேபராக பணிபுரிய வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 30 மாதங்களுக்கு செல்லத்தக்க கடவுச் சீட்டு, சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம் ஆகியவற்றின் இரண்டு நகல்கள், நீலநிற பின்னணியில் எடுக்கப்பட்ட ஐந்து புகைப்படத்துடன் சனிக்கிழமை (செப்.19) காலை 9 மணிக்கு எண் 42, ஆலந்தூர் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600032 என்ற முகவரியிலுள்ள தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.
 கூடுதல் விவரங்களுக்கு, www.omcmanpower.com என்ற இணையதளத்திலும், 044-22502267, 22505886, 8220634389 என்ற தொலைபேசி, செல்லிடப்பேசி எண்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments