FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சர்வதேச நீதி விசாரணை நடத்த ரனில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்த வேண்டும்: பிரதமருக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

இலங்கை மீது சர்வதேச நீதி விசாரணை நடத்த ரனில் விக்ரமசிங்கவிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

இலங்கை மீது சர்வதேச நீதி விசாரணை நடத்த ரனில் விக்ரமசிங்கவிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரனில் விக்கிரமசிங்க 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார். தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு சிக்கல்கள் பற்றி பேசவுள்ளார்.

Advertisement

Advertisement

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தரும் கடமையும், பொறுப்பும் மற்ற நாடுகளை விட இந்தியாவுக்குத் தான் அதிகமாக உள்ளது. எனவே, இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணையில் தெரியவரும் உண்மைகள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஒப்புக் கொள்ளும்படி இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டும்.

மேலும், இதற்கானத் தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவே கொண்டு வர வேண்டும். அதுமட்டுமின்றி, இந்தியா-இலங்கை இடையிலான வங்கக்கடல் பகுதியில் இருநாட்டு மீனவர்களும் எந்த பிரச்சினையும் இன்றி மீன்பிடிக்கும் வகையில் ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என இலங்கைப் பிரதமரிடம் இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments