FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழகத்தில் இதுவரை 138 கோயில் தேர்கள் சீரமைப்பு: அமைச்சர் காமராஜ் தகவல்

தமிழகத்தில் இதுவரை 138 திருக்கோயில்களின் தேர்கள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

தமிழகத்தில் இதுவரை 138 திருக்கோயில்களின் தேர்கள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
 சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, சங்கரன்கோவில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.முத்துசெல்வி, தனது தொகுதியில் உள்ள சங்கரநாராயண சாமி கோயிலின் சிலைகள், தூண்கள், ஓவியங்கள் புதுப்பிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, உணவு-அறநிலையங்கள் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அளித்த பதில்:
 சங்கரநாராயணசாமி கோயிலின் சிலைகள், தூண்கள், ஓவியங்களை பழைமை மாறாமல் புதுப்பிக்க தொல்லியியல் துறை வல்லுநர்கள் மூலமாக அறிக்கை பெறப்பட்டுள்ளது. இப்போது, அனைத்தும் மரப்பலகை மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளன. புதுப்பிப்பதற்கான உரிய மதிப்பீடுகள் பெற்ற பிறகு தொடங்கப்படும்.
 கோயிலில் உள்ள பிள்ளையார் ரதத்தைச் சீரமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ரதம் ரூ.9 லட்சத்தில் சீரமைத்து புதிய தேர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் இதுவரை 138 கோயில்களின் திருத்தேர்கள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments