தமிழகத்தில் இதுவரை 366 உலர் களங்கள்
நெல், தானியங்கள் உள்ளிட்டவற்றை உலர வைப்பதற்காக, தமிழகத்தில் இதுவரை 366 உலர் களங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக
நெல், தானியங்கள் உள்ளிட்டவற்றை உலர வைப்பதற்காக, தமிழகத்தில் இதுவரை 366 உலர் களங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதி-வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, புதுக்கோட்டை உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், தனது தொகுதியில் கீழமஞ்சக்கரை, வடக்குப்பட்டி ஆகிய இடங்களில் உலர் களங்கள் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, அமைச்சர் வைத்திலிங்கம் அளித்த பதில்:
தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், நெல், தானியங்கள் உள்ளிட்டவற்றை உலர வைப்பதற்காக இதுவரை 366 களங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு எந்தெந்த இடங்களில் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் உலர் களங்கள் நிச்சயம் அமைக்கப்படும் என்றார் அமைச்சர் வைத்திலிங்கம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.