FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் ஆளில்லா கண்ணாடியிழைப் படகு ஒன்று கரை ஒதுங்கியது திங்கள்கிழமை காலை தெரியவந்தது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் ஆளில்லா கண்ணாடியிழைப் படகு ஒன்று கரை ஒதுங்கியது திங்கள்கிழமை காலை தெரியவந்தது. இந்தப் படகு இலங்கையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
 வேதாரண்யம், மணியன்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய இந்தப் படகில் 8 குதிரைத் திறனுடைய யமஹா என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. பச்சை வண்ணத்தில் இருந்த படகின் பக்கவாட்டின் மையப் பகுதியில் காவி வண்ணத்தில் தடித்த கோடு காணப்பட்டது. பதிவு எண் போன்ற விவரங்கள் இல்லை.
 இதில், மீன்பிடி வலைகள் நான்கு கட்டுகள் இருந்தன. படகில் கிடந்த குடிநீர் பாட்டிலில் இலங்கையைச் சேர்ந்த நிறுவனத்தின் பெயர் இருந்தது. இதனால் படகும் அந்த நாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
 படகை கைப்பற்றிய வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், கியூ பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments