FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

30 ஆண்டுகளுக்கு பின் காமிரா முன் முகம் காட்டும் மு.க. ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், தூர்தர்ஷன் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திமுகவின் பிரசாரத்துக்காக சில குறும்படங்களில் நடித்துள்ளார்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், தூர்தர்ஷன் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திமுகவின் பிரசாரத்துக்காக சில குறும்படங்களில் நடித்துள்ளார்.

முடியட்டும், விடியட்டும் எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள திமுகவின் குறும்படங்கள், சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன.

அதிமுக அரசை தாக்கியும், திமுகவுக்கு ஆதரவாகவும் இந்த குறும்படங்கள் இயக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

மு.க. ஸ்டாலின் காமிரா முன் முகம் காட்டுவது இது முதல்முறையல்ல. சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பே, ஸ்டாலின் ஒரு சினிமாவிலும், தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடர்களில் தன் முகம் காட்டியுள்ளார்.

கருணாநிதி எழுத்தில் உருவான 'ஒரே ரதம்'  என்ற திரைப்படத்தில் ஸ்டாலின் கதாநாயகனாக நடித்தார். ஆனால், அப்படம் ஸ்டாலினுக்கு பெயர் வாங்கித் தரவில்லை.

அதே போல, குறிஞ்சி மலர் என்ற தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடரிலும் ஸ்டாலின் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments