50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலை அமைக்க இந்து முன்னணி ஏற்பாடு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை அமைக்க உள்ளதாக,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை அமைக்க உள்ளதாக, இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தவத்சலம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பொதுக் கூட்டங்கள், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் ஆகியவை 250 இடங்களில் நடைபெற உள்ளன.
மேலும், தீண்டாமை, பயங்கரவாதம் ஆகியவற்றை அகற்ற சமுதாய நல்லிணக்க நாள், குழந்தைகள் தினம், மகளிர் தினம் உள்ளிட்ட 3 நாள்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதேபோல், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தமிழ்வழிக் கல்வியை தொடக்கப் பள்ளிகளில் கட்டாயமாக்க அரசை வலியுறுத்த உள்ளோம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.