FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆன்மிக எழுச்சி மூலம் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்:பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி

ஆன்மிக எழுச்சி மூலம் கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார் பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

ஆன்மிக எழுச்சி மூலம் கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார் பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி.

திருச்செங்கோடு மாதொருபாகன் இறைபணி மன்றம் சார்பில், சக்தியர் சங்கமம் விழா நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ராஜேஸ்வரி லோகநாதன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. பேராசிரியர் கனகசபாபதி அறிமுக உரையாற்றினார்.

விழாவில் "பாரத கலாசாரத்தில் பெண்மை' என்ற தலைப்பில் பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி பேசியதாவது:

Advertisement

Advertisement

திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் மட்டும்தான் சுயம்பு என்று நாங்கள் நினைத்திருந்தோம். இங்குள்ள பொருளாதாரமும் சுயம்பு என்பது இங்கு வந்த பிறகுதான் தெரியவந்தது. கொங்கு நாட்டு வளர்ச்சி என்பது மக்களால் உருவாக்கப்பட்டது. மக்களின் உழைப்பு, அரசுக்கு எந்த வேலையும் இல்லாத வளர்ச்சி இங்குள்ளதை உணர முடிகிறது.

மேற்கத்திய நாடுகளைப்போல நாமும் மாற வேண்டும் என்று 60 ஆண்டுகளுக்கும் மேலாக மோசமான நிலை தொடர்வதற்குக் காரணம் ஆங்கிலம் படித்தவர்கள்தான். 1991-இல் உலகமயமாக்கல், தாராளமயமாக்கலை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை வந்தபோது, அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், அந்தக் கலாசாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

பெண்தான் அம்மையாகவும், அப்பாவாகவும் இருக்க முடியும். அப்பாவால் அம்மாவாக இருக்க முடியாது.

பெண்மைக்கு பெரிய சக்தி இருப்பதால்தான் குடும்பத்துக்கு சக்தி இருக்கிறது. அதனால்தான் சேமிப்பும், முதலீடும் உருவாகி நாடு வளர்ச்சி அடைகிறது.

பொருளாதாரத்தின் ஆதாரமே குடும்பம்தான். ஆனால், பள்ளி, கல்லூரிகளின் பொருளாதாரப் புத்தகங்களில் குடும்பம் என்ற வார்த்தை இப்போதும் இல்லை.

மேலைநாடுகள் தொழில்நுட்பம், அறிவியல், மருத்துவம், கல்வி போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்றிருந்தாலும், அந்த நாட்டு மக்கள் குடும்பக் கட்டமைப்பு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

பொருளாதாரம், தொழில்நுட்பம், வளர்ச்சி போன்ற கட்டமைப்புகள் சரிவடைந்தால், அதை மீண்டும் கட்டமைக்க முடியும். ஆனால், குடும்பச் சூழல் ஒரு முறை சீரழிந்தால், அதைக் கட்டமைக்க முடியாது. கலாசாரச் சீர்கேடுகளுக்குக் காரணமாகத் திகழும் சிலருக்கு நமது கலாசாரத்தின் வலிமையை உணர்த்த வேண்டும்.

இந்தியாவின் பொருளாதாரம் குடும்பம், சமுதாயம், ஆன்மிகம், கலாசாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதால்தான் இதைச் சிதைக்க பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

நல்லது நடப்பதை பத்திரிகைகள் பிரசுரம் செய்வதில்லை. நல்லது குறித்து எழுதுவதில்லை என்று முடிவு செய்துள்ளதால்தான் பிரச்னை செய்யாத மதத்தினரை இழிவுபடுத்தும் செயல் நடைபெற்று வருகிறது. திருச்செங்கோடு மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காகப் போராட்டம் நடத்தத் தேவையில்லை.

கடந்த ஆண்டு நடந்த வைகாசி விசாக விழாவில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர் என்றால், இந்த ஆண்டு 10 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும். அப்போதுதான் கீழ்த்தரமாக எழுதப்பட்ட நூலுக்கும் மரியாதை இல்லாமல் போகும். மக்கள் எழுச்சி, ஆன்மிக எழுச்சி வேண்டும்.

இதைத் தமிழக மக்கள் நிரூபித்துள்ளனர். திருச்செங்கோடு மக்களும் அதைச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments