FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பைக் மீது கார் மோதல்: பள்ளி மாணவர்கள் இருவர் சாவு

திருப்பரங்குன்றம் அருகே நான்கு வழிச் சாலையில் சனிக்கிழமை பைக் மீது கார் மோதியதில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

திருப்பரங்குன்றம் அருகே நான்கு வழிச் சாலையில் சனிக்கிழமை பைக் மீது கார் மோதியதில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்த சக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா (40). இவர், தனது தாயார் ஹேமலதா (65), மனைவி சுஜிதா (35), மகன் சுஜித் (16), மகள் சஞ்சனா (5) ஆகியோருடன் காரில் திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை பிரசன்னாவே ஓட்டி வந்தார். திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் நான்கு வழிச் சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் திருநகர் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த ரவிராஜன் மகன் அஜய் (16), தென்பழஞ்சியைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் ஆகாஷ் (16) இருவரும் டியூசன் செல்வதற்காக பைக்கில் தென்பழஞ்சியில் இருந்து வந்து கொண்டிருந்தனர். நான்கு வழிச்சாலையை இவர்கள் கடக்க முயன்ற போது, பைக் மீது கார் மோதியது. இதில் மாணவர்கள் அஜய்யும், ஆகாஷும் அங்கேயே உயிரிழந்தனர்.

காரில் வந்த பிரசன்னா, அவரது தாயார் ஹேமலதா உள்ளிட்ட 5 பேரும் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments