FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

"விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் பாஜக தோல்வி'

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது என்றார் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலர் ஆனி ராஜா.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது என்றார் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலர் ஆனி ராஜா.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:

பாஜக தேர்தல் பிரசாரத்தின்போது விலைவாசி உயர்வை முக்கிய பிரச்னையாக பேசியது. இதன்மூலம் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தோல்வியடைந்துள்ளது. பாஜகவின் வாக்குறுதிக்கும், செயலுக்கும் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது.

Advertisement

Advertisement

ஒவ்வொரு மாநிலத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்.

ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. குஜராத் மாதிரி இந்தியாவைக் கொண்டு வருவேன் எனக் கூறி வந்தார். நம் நாட்டிலேயே குஜராத்தில்தான் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் 51 சதம் குறைக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான இடஒதுக்கீடும் நிறைவேற்றப்படவில்லை. காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியாவின் சாவில் மர்மம் இருப்பதால், இது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிலிருந்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

முழு மதுவிலக்குக் கோரி எங்களது போராட்டம் தொடரும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments