மகிளா காங்கிரஸின் அகில இந்திய பொதுச் செயலாளராக விஜயதாரணி நியமனம்
காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவான மகிளா காங்கிரஸின் அதில இந்திய பொதுச் செயலாளராக விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினர் விஜயதாரணி நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவான மகிளா காங்கிரஸின் அதில இந்திய பொதுச் செயலாளராக விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினர் விஜயதாரணி நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் மகளிர் காங்கிரஸ் பிரிவின் பொறுப்பாளரான ராகுல் காந்தி, மகிளா காங்கிரஸ் பிரிவின் அகில இந்திய பொதுச் செயலாளராக விஜயதாரணியை உடனடியாக நியமிப்பதற்கு ஒப்பதுல் அளித்துள்ளதாக, கட்சியின் பொதுச் செயலர் ஜனார்தன் துவேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மகளிர் பிரிவு தலைவராக இருந்த விஜயதாரணி கடந்த சில நாள்களுக்கு முன்பு, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஜான்சி ராணி நியமிக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.