முகப்பு
தமிழ்நாடு

அரசியல் நேர்மையைப் பற்றி பேச பாஜக தகுதியிழந்துவிட்டது: வைகோ காட்டம்

குஜராத் மாநிலங்களவைத் தொகுதிக்கான தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதன் மூலம், பாஜக அரசியல் நேர்மையைப் பற்றி பேசும் தகுதியை இழந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

Updated On : 9 ஆகஸ்ட், 2017 at 11:27 AM
பகிர்:


சென்னை: குஜராத் மாநிலங்களவைத் தொகுதிக்கான தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதன் மூலம், பாஜக அரசியல் நேர்மையைப் பற்றி பேசும் தகுதியை இழந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி பெற்றுள்ளார். மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், பாஜக வேட்பாளர் ஒருவர் தோல்வியை சந்தித்திருப்பது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

அதோடு, காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதாக பாஜகவுக்கு எதிராக கடும் விமரிசனங்களும் எழுந்துள்ளன.

Advertisement

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலர் வைகோ, ஒரு நாள் நீதி வெல்லும் என்று சொல்வது போல், நீதி வென்றது. ஒரு கட்டத்தில் தர்மம் வெல்லும் என்று சொல்வது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அரசியல் செய்கிறது பாஜக. 

கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வாக்குகள் செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இதன் மூலம், கன்னத்தில் அறை வாங்கி இருக்கிறது பாஜக. 

காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சித்தது. இரண்டு எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததை பாஜக தலைவர்களுக்கு காட்டியதால், அவர்களது வாக்குகளை செல்லாதவையாக அறிவித்து, தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஜனநாயகத் திருடர்கள். அவர்களது வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இனி, அரசியல் நேர்மையை பற்றிப் பேச மோடிக்கு அருகதை இல்லை, அந்த தகுதியை அவர் இழந்துவிட்டார் என்று வைகோ கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.