பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது மிகுந்த மனவேதனை: எச்.ராஜா ட்வீட்டுக்கு தமிழிசை எதிர்வினை!
பெண்கள் எந்தக்கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது என்று கனிமொழி பற்றிய எச்.ராஜா ட்வீட்டுக்கு தமிழிசை எதிர்வினை..
சென்னை: பெண்கள் எந்தக்கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது என்று கனிமொழி பற்றிய எச்.ராஜா ட்வீட்டுக்கு தமிழிசை எதிர்வினை புரிந்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யாப்பட்டுளார். இதுதொடர்பாக சென்னையில் செவ்வாயன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித செய்தியாளர்களைச் சந்தித்தார்.
புதனன்று காலை இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் தேசிய செயலரான எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினைப் பதிவு செய்திருந்தார். அதில் திமுக மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழியினை கீழ்த்தரமாக விமர்சித்து இருந்தார். இதனால் அவருக்கு எதிராக திமுகவினர் சென்னையில் போராட்டங்களை நடத்தினர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் பெண்கள் எந்தக்கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது என்று கனிமொழி பற்றிய எச்.ராஜா ட்வீட்டுக்கு தமிழிசை எதிர்வினை புரிந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக் கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.