கடம்பூர்-வாஞ்சிமணியாச்சி இடையே பராமரிப்பு பணிகள்: ரயில்கள் பயண நேரத்தில் மாற்றம்
கடம்பூர்-வாஞ்சிமணியாச்சி இடையே நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடம்பூர்-வாஞ்சிமணியாச்சி இடையே நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: கடம்பூர் மற்றும் வாஞ்சி மணியாச்சி இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அவ்வழியே இயக்கப்படும் ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில்(எண்.56769/56770) ஆகஸ்ட் 3 முதல் 15 ஆம் தேதி வரை சாத்தூர் மற்றும் திருநெல்வேலி இடையே திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இதே ரயில் மதுரை மற்றும் திருநெல்வேலி இடையே புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம்-திருநெல்வேலி அந்தியோதயா விரைவு ரயில்(எண்.16191) ஆகஸ்ட் 3 முதல் 10 ஆம் தேதி வரை சாத்தூர் ரயில் நிலையத்தில் 65 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு 80 நிமிடங்கள் தாமதமாக மாலை 4.50 மணிக்கு வந்தடையும்.
இதே ரயில் ஆகஸ்ட் 11 முதல் 15 ஆம் தேதி வரை கடம்பூர் ரயில் நிலையத்தில் 87 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு 80 நிமிடங்கள் தாமதமாக மாலை 4.50 மணிக்கு வந்தடையும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.