இலவச தங்கும் விடுதி: வெங்கய்ய நாயுடு ரூ.5 லட்சம் நிதி உதவி
சென்னை சேத்துப்பட்டில் அரிஜன சேவா சங்கம் சார்பில் கட்டப்பட்டு வரும் ஏழை மாணவிகளுக்கான இலவச தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ரூ. 5 லட்சம் நிதி உதவி
சென்னை சேத்துப்பட்டில் அரிஜன சேவா சங்கம் சார்பில் கட்டப்பட்டு வரும் ஏழை மாணவிகளுக்கான இலவச தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ரூ. 5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.
சேத்துப்பட்டில் உள்ள எஸ்ஆர்எஸ் சர்வோதயா மகளிர் விடுதி வளாகத்தில் அரிஜன சேவா சங்கம் சார்பில் 228 அறைகளுடன்கூடிய மாணவிகளுக்கான இலவச தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. அண்மையில், அரிஜன சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நிர்மலா தேஷ்பாண்டேவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இந்த விடுதிக் கட்டுமானப் பணிக்காக ரூ. 5 லட்சம் நிதி உதவி அளிப்பதாக அறிவித்தார். அதன்படி, இதற்கான காசோலையை அவரது மகள் தீபா வெங்கட், பேரன் விஷ்ணு, பேத்தி சுஷ்மா ஆகியோர் அரிஜன சேவா சங்கத்தின் தலைவர் (தமிழ்நாடு) பி.மாருதியிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன் சொந்த நிதியில் இருந்து ரூ.2,500 வழங்கினார். மேலும், இந்த விடுதிக் கட்டுமானப் பணிக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.