கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு: மருத்துவமனைக்கு வந்தார் தயாளு அம்மாள்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் திடீரென சற்று பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் திடீரென சற்று பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை முதலே கருணாநிதியின் குடும்பத்தினர் ஒருவர் பின் ஒருவராக அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலையில் இன்று காலை திடீரென சற்று பின்னடைவு ஏற்பட்டதாகவும் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்களாகும் நிலையில், அவரது மனைவி தயாளு அம்மாள் முதல் முறையாக இன்று மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
கருணாநிதி பயன்படுத்திய காரில் தயாளு அம்மாளை மகன் தமிழரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.