FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வரிடம் அன்புமணி மனு

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, முதல்வர் எடப்பாடி

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:


தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி திங்கள்கிழமை நேரில் மனு அளித்தார். தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து அவர் இக்கோரிக்கை மனுவை அளித்தார்.
மனு விவரம்: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை விரைவாக விசாரிக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 
புள்ளிவிவரங்களுடன்: தமிழகத்தில் இடஒதுக்கீடு பெறுவோரின் எண்ணிக்கை, தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 69 சதவீதத்துக்கும் அதிகம் என்பதை உறுதி செய்யத்தக்க புள்ளிவிவரங்களுடன் நிரூபிக்க வேண்டும். தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் அளவு 87 சதவீதம் என்பது அம்பாசங்கர் ஆணையத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது கணக்கெடுப்பின் மூலம் உறுதி செய்யப்பட்ட ஒன்று அல்ல என்பதால் இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. 
பாதுகாக்க: இத்தகைய சூழலில் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் அளவை உறுதி செய்வதுதான். ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது கடினமான பணி அல்ல. கணக்கெடுப்பை அதிகபட்சம் 45 நாள்களில் நடத்தி முடித்துவிடலாம். அதிக செலவும் ஆகாது. இதன் மூலம் நீண்டகாலமாக ஆபத்தை எதிர்கொண்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும். எனவே, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்று தமது மனுவில் அன்புமணி கூறியுள்ளார். 
பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments