FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பொதுமக்கள் தண்டவாளத்தை கடப்பதைத் தடுக்க முள் செடிகள் வைப்பு: விபத்துகளைத் தவிர்க்க திருப்பரங்குன்றம் போலீஸார் நடவடிக்கை

திருப்பரங்குன்றத்தில் தண்டவாளத்தை கடக்கும்போது ஏற்படும் விபத்துகளை தடுக்கும் விதத்தில் போலீஸார்அந்த பாதை வழியில் முள் செடிகளை அடுக்கி வைத்துள்ளனர். 

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

திருப்பரங்குன்றத்தில் தண்டவாளத்தை கடக்கும்போது ஏற்படும் விபத்துகளை தடுக்கும் விதத்தில் போலீஸார்அந்த பாதை வழியில் முள் செடிகளை அடுக்கி வைத்துள்ளனர். 
 திருப்பரங்குன்றம் நகருக்குள் பொதுமக்கள் செல்ல புறவழிச்சாலை வழியே பேருந்தில் இறங்கி தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை இருந்தது. இதனால் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பக்தர்கள் என பலர் ரயிலில் அடிபட்டு இறந்தனர். 
இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் புறவழிச்சாலை வழியாக திருமங்கலம் செல்லும் அரசுப்பேருந்துகள் திருப்பரங்குன்றம்நகர் வழியாக இயக்கப்பட்டன. 
அதே சமயம் ஷேர் ஆட்டோக்கள் புறவழிச் சாலைவழியாக சென்று வந்தன. இதில் பயணிப்போர் ஏற்கனவே சென்றது போல தண்டவாளத்தை கடந்து சென்றனர். இதனை தடுக்க அவ்வப்போது ரயில்வே நிர்வாகம் தண்டவாளத்தை கடக்கும் பயணிகளுக்கு அபராதம் விதித்தது.
இதனை முழுமையாக தடுக்க திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வெயிலுகந்த அம்மன் கோயில் அருகே காவலர் ஒருவரை நிறுத்தி அந்த இடத்தில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தவிடாமல் செய்கின்றனர். மேலும் போலீஸார் ரயில் தண்டவாளத்தை பொதுமக்கள் கடக்க முடியாதவாறு பாதையில் முள் செடிகளைப் போட்டு வைத்தனர். இதனால் தண்டவாளத்தை பொதுமக்கள் கடப்பது முற்றிலும் தடுக்கப்பட்டது. 
பொதுமக்கள் கோரிக்கை: திருப்பரங்குன்றம் நகருக்குள் பேருந்துகள் வந்து செல்வதை வரவேற்கிறோம். அதே சமயத்தில் திருப்பரங்குன்றம் மூலக்கரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து  சுரங்கப்பாதை வழியாக திருப்பரங்குன்றம் நகருக்குள் வரும்போது அங்கு மின் விளக்கு இல்லாததால் அவ்வழியே செல்வது மாணவ, மாணவிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இதேபோல பூங்கா பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு செல்லும் வழியில் உள்ள தண்டவாளத்தை கடக்க சுரங்கப்பாதை   அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments