FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க முடியுமா? தமிழகத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க முடியுமா என்று தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
முல்லைப் பெரியாறு அணையின் உபரி நீர் இடுக்கி அணைக்கு செல்லும் வகையில் திறக்கப்பட்டுள்ள 13 மதகுகள். (கோப்புப் படம்).
பகிர்:


புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க முடியுமா என்று தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 138 அடிக்குக் குறைக்கக் கோரி கேரளாவைச் சேர்ந்த ரசூல் ஜாய் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது கேரள தரப்பில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு உள்ளிட்ட தகவல்களை தமிழகம் பகிர்ந்து கொள்வதில்லை. அணையில் இருந்து எப்போது நீர் திறக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. மக்கள் எப்போதும் அச்சத்திலேயே உள்ளனர். இது பரிசோதனை செய்வதற்கான நேரம் அல்ல. மத்திய அரசின் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்க வேண்டும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும்  அணையில் ஆய்வு செய்ய வேண்டும். பேரிடர் மேலாண்மை செயல் திட்டம் குறித்து விளக்க வேண்டும் என்று வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

கேரள வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 138 அடிக்குக் குறைக்க முடியுமா? என்றும், கன மழை பெய்து வருவதால் நீர்மட்டத்தைக் குறைக்க முடியுமா? என்றும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. 

மேலும், முல்லைப் பெரியாறு அணியின் நிலவரம் பற்றி துணைக் கண்காணிப்புக் குழு அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் அணை நிலவரம், நீர்திறப்பு, பேரிடர் மேலாண்மை செயல் திட்டம் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, நாளை பிற்பகலுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments