FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வளசரவாக்கத்தில் மழைநீர் வடிகாலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை: சுதந்திரம் என பெயர் சூட்டிய மக்கள்

சென்னை வளசரவாக்கத்தில் மழைநீர் வடிகாலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. மருத்துவமனையில் உரிய சிகிச்சைக்குப் பிறகு தற்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:


சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் மழைநீர் வடிகாலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. மருத்துவமனையில் உரிய சிகிச்சைக்குப் பிறகு தற்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.

குழந்தைக்கு சென்னையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பாலைப் பெற்று மருத்துவமனை ஊழியர்கள் அளித்து வருகின்றனர்.

வளசரவாக்கம் எஸ்.வி.எஸ். நகர் 6-ஆவது வீதியில் அமைந்துள்ள மழை நீர்வடிகால் கால்வாயில் புதன்கிழமை காலை பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. 

Advertisement

Advertisement

அக் குழந்தையின் அழுகுரல் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த கீதா, அதை பத்திரமாக மீட்டார். தொப்புள் கொடியுடன் இருந்த அந்த குழந்தையை உடனடியாகச் சுத்தப்படுத்திய அவர், வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துவிட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார்.
சுதந்திர தினத்தன்று அந்த குழந்தை பிறந்ததால், சுதந்திரம் என அப்பகுதி மக்கள் பெயர் சூட்டினர். 

பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய கீதாவை அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கீதாவுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கீதா, குழந்தையை மீட்ட காட்சிகள் கட்செவி அஞ்சல், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

பச்சிளங்குழந்தையை மழை நீர் வடிகால்வாயில் வீசியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments