FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கொல்லம் - செங்கோட்டை வழித்தடத்தில் இன்று பயணிகள் ரயில் சேவை ரத்து

பராமரிப்பு பணிகளுக்காக கொல்லம்-செங்கோட்டை பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

பராமரிப்பு பணிகளுக்காக கொல்லம்-செங்கோட்டை பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   
ரயில் பாதையில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்யும் பணி நடைபெறுவதால் கொல்லம் - செங்கோட்டை - கொல்லம் (56336/56335) பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும்,  அதேபோல கொல்லம்  - தாம்பரம் (06028) சிறப்பு ரயில், இன்று கொல்லம்-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலி - மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் ரயில் (56821/56822) செப்டம்பர் 1 முதல் மேலும் 3 மாதங்களுக்கு வடமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த ரயில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை சோதனை அடிப்படையில் வடமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 தற்போது மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments