வருமானவரி கணக்குத் தாக்கல்: இன்று கடைசி
மாத சம்பளம் பெறுவோர் உள்பட தணிக்கைக்கு உட்படாத வகையைச் சேர்ந்தவர்கள் கடந்த நிதியாண்டுக்கான (2017-18) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.
சென்னை: மாத சம்பளம் பெறுவோர் உள்பட தணிக்கைக்கு உட்படாத வகையைச் சேர்ந்தவர்கள் கடந்த நிதியாண்டுக்கான (2017-18) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.
கேரளத்துக்கு நீட்டிப்பு: மழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்தோர்
கடந்த நிதியாண்டுக்கான (2017-18) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய செப்டம்பர் 15-ஆம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய நிதி அமைச்சகம் வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பளதாரர்கள் உள்ளிட்டோர் ஆண்டுதோறும் வருமான வரிக் கணக்கை ஜூலை 31-க்குள் தாக்கல் செய்ய கெடு நிர்ணயிக்கப்படும். வருமான வரிப் படிவங்கள் குறித்த அறிவிப்பில் ஏற்பட்ட தாமதம், வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) குறித்த தகவலை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால், கடந்த நிதியாண்டுக்கான (2017-18) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய நிதி அமைச்சகம் நீட்டித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.