கிராம நிர்வாக அலுவலர்கள் பணிக்கு வராத நாள்களுக்கு ஊதியம் வழங்கம் வேண்டாம்: ஆட்சியர்களுக்கு அறிவுரை
கிராம நிர்வாக அலுவலர்கள் 1 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்; உட்பிரிவு பட்டா மாறுதல் உள்பட அனைத்துவிதமான பட்டா மாறுதல்களிலும் கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும்; கிராம நிர்வாக அலுவலரின் கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்த வேண்டும்; கூடுதல் பொறுப்பை கவனிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் வாரிசு சான்று, இருப்பிடச் சான்று, ஜாதி சான்று, திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பெற வழியின்றி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் விவசாயிகள் வங்கிக் கடன் பெறுவதற்கான சான்றிதழ்களை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணிக்கு வராத நாள்களுக்கு ஊதியம் வழங்கம் வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.